வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:24 IST)

என்னது சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவின் முதல் பிரதமரா? கங்கனா சொன்ன அடடே தகவல்!

சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் பாலிவுட்டைத் தவிர்த்து இப்போது கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது கங்கனா நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “இந்தியாவின் முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நமக்கு சுதந்திரம் கிடைத்த போது எங்கே சென்றார்?” எனக் கேட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பது கூட தெரியாமல் இவர் அரசியலுக்கு வந்துள்ளாரே என்று அவர் மேல் ட்ரோல்கள் குவிய ஆரம்பித்துள்ளன.