1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (15:48 IST)

தாஜ்மஹால் என்னுடையது.. மதுரை கோவில் உங்களுடையது! – கமல்ஹாசன் பதில்!

வட இந்தியா, தென் இந்தியா என்ற பேதமில்லாமல் இந்தியனாய் தான் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், ப்ரொமோஷன் பணிகளுக்காக பல்வேறு நகரங்களுக்கும் கமல்ஹாசன் பயணித்து செய்தியாளர் சந்திப்பில் பேசி வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வட இந்தியா, தென் இந்தியா பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய கமல்ஹாசன் “நான் ஒரு இந்தியன். என்னை பொறுத்தவரை தாஜ்மஹால் என்னுடையது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உங்களுடையது. கன்னியாக்குமரி எந்த அளவு உங்களுக்கு சொந்தமோ அதேபோல காஷ்மீர் எனக்கு சொந்தம்” என பேசியுள்ளார்.