திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:21 IST)

காலையில் யாரோ எழுதிக் கொடுத்ததை மாலையில் பேசும் கமல்ஹாசன் - செல்லூர் ராஜூ

நடிகர் கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டுமே காலையில் பேசிவிட்டு மாலையில் நடித்துக் கொண்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நேற்று திண்டுக்கல்லில் இருந்து ஒரு பகுதிக்குச் சென்ற புதிய பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியது குறித்து கமல்ஹாசன் தனது  டுவிட்டர் பக்கத்தில் பேருந்தில் ஒழுகுவது மழைநீரா ஊழலா என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் பைபாஸ் சாலை அருகே தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணியைப் பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, கமல்ஹாசன் அரசியலை படப்பிடிப்புத் தளமாக நினைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டுமே காலையில் பேசிவிட்டு மாலையில் நடித்துக் கொண்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.