வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 14 நவம்பர் 2020 (17:31 IST)

’’தோற்கும்போது கிடைக்கும் வலி…’’ சூரரை போற்று" திரைப்படம் குறித்து சேரன் டுவீட்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேற்று முன்தினம் இரவு அமெசான் வீடியோ பிரைமில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

இந்நிலையில், இப்படத்தை பற்றி பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நல்ல விமர்சனங்கள் அளித்து வருகின்றனர்.

இயக்குநரும் நடிகருமான் சேரன் இப்படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், @Suriya_offl @Sudhakongara_of வாழ்த்துக்கள்..

முயற்சிகள் தோற்கும்போதும் தோற்கடிக்கப்படும்போதும் கிடைக்கும் வலி என்ன என நன்றாக உணர்ந்தவன் என்பதால் அதிகம் பாதித்தது "சூரரை போற்று" திரைப்படம்.. என்னதான் ஏழை கனவு வென்றாலும் இறுதியில் பணக்காரன் அதை பிடுங்கிகொள்கிறான். இதுதானே உண்மை எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு சூர்யா நன்றிகள் பல எனப் பதிவிட்டுள்ளார்.