செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:45 IST)

பாஜக பேரணியில் கல்வீசி தாக்கப்பட்ட செருப்புக் கடை… கமல்ஹாசன் விசிட்!

நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

கோவைக்கு நேற்று பாஜக முக்கியத் தலைவரும் உத்தர பிரதேச மாநில முதல்வருமான யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்துக்காக வந்தார். அதை முன்னிட்டு பாஜகவினர் இரு சக்கர வாகனத்தில் பேரணி சென்றனர். அப்போது கோவை டவுன்ஹால் சாலையில் உள்ள ஒரு செருப்புக்கடை மீது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியது வீடியோவாக வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அந்த கடைக்கு சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசன் கடை உரிமையாளரிடம் உரையாடினார். பின்னர் அந்த கடையில் தனக்கு ஒரு புதிய செருப்பு வாங்கிக்கொண்டார்.