தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியான தகவல்!
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் நாளை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு 15 நாட்கள் முக்கியமான ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் கமல், சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை ஏபி இண்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை 63 கோடி ரூபாய்க்கு இவ்விரு நிறுவனங்களும் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது விஜய்யின் லியோ படத்தின் பிஸ்னஸை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் லியோ படம்தான் அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.