1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (07:38 IST)

பிரபாஸின் ‘கல்கி ஏடி 2898’ படத்தில் கமல்ஹாசன் இவ்வளவு நேரம்தான் வருவாரா?

கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் படத்தின் டிரைலர் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் கமல்ஹாசன் வெறும் 19 நிமிடம் மட்டுமே வருவார் என சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தில்தான் அவரது கதாபாத்திரத்துக்கு அதிக காட்சிகள் என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் அவர் 90 நிமிடங்கள் வரை வருவார் என்று சொல்லப்படுகிறது.