செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (12:19 IST)

முக ஸ்டாலின் -முக அழகிரி நேருக்கு நேர் சந்திப்பு..! எங்கு தெரியுமா?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தாயாருமான தயாளு அம்மாளின் 90 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி ஆகியோர் தயாளு அம்மாள் தங்கி இருக்கும் கோபாலபுரம் தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தயாளு அம்மாள் வாழும் இல்லத்திற்கு சற்று முன் வந்து அவர் தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். 
 
அதேபோல் திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் தயாளு அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தயாளு அம்மாளின் 90 ஆவது பிறந்தநாளில் கலந்து கொண்ட முக அழகிரி மற்றும் மு க ஸ்டாலின் ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva