வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (07:25 IST)

இன்று நடக்கும் லியோ வெற்றி விழா நிகழ்ச்சியில் ரஜினி கமல் கலந்துகொள்கிறார்களா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான 12 நாட்களில் 541+ கோடிகளை வசூலித்து படம் மிகப் பெரும் ஹிட் அடித்துள்ளது.

விடுமுறை தினங்கள் முடிந்துள்ள நிலையில் இப்போது கலெக்‌ஷன் குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வசூலை பூஸ்ட் செய்ய வெற்றிவிழாவை நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாட உள்ளது படக்குழு. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். காவல்துறையும் நிபந்தனைகளோடு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை என படக்குழு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.