செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (15:56 IST)

சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் கமல்ஹாசன்…. இயக்குனர் இவர்தானாம்!

நடிகர் கமல்ஹாசன் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் வணிக மதிப்புமிக்க இயக்குனராக உருவாகியுள்ளார். தனது மூன்றாவது படத்தில் விஜய்யையும், நான்காவது படத்தில் கமலையும் இயக்கி கோலிவுட்டை ஒரு கலக்கி கலக்கி விட்டார். இந்நிலையில் இப்போது ராஜ்கமல் நிறுவனத்துக்காக கமலை வைத்து ஒரு படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்த படம் கமல் நிறுவனத்துக்கே செய்யப் போகிறாராம்.

அந்த படத்தில் நடிக்க போவது நடிகர் சிம்புவாம். சிம்புவுக்காக ஒரு கதையை தயார் செய்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். கமல் படத்தை முடித்தபின்னர் அந்த படம் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.