ஹிந்தியில் ரீமேக் ஆகும் லோகேஷ் கனகராஜ் படம்: இயக்குனர் யார் தெரியுமா?
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான ’மாநகரம்’ நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான ’கைதி’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது
இதனையடுத்து தற்போது அவர் விஜய், விஜய்சேதுபதி நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான ’மாநகரம்’ திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாகவும் இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
விக்ரம் நடித்த ‘சாமி 2’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஷிபு தமீன் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் ஒரு ஹீரோவாக முன்னணி இந்தி நடிகர் ஒருவரும், இன்னொரு ஹீரோவாக சஞ்சய் மிஸ்ரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி ஆகி உள்ளது