திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By

இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் திடீர் கைது…!

இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங்  கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் வெளியாகியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் யுவ்ராஜ் சிங் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. சக வீரர் ரோஹித் ஷர்மாவுடான இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவுபடுத்தும் விதமாக யுவ்ராஜ் பேசியதாக கடந்த ஆண்டு ஒரு சர்ச்சை எழுந்தது. அதற்கு அப்போதே அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அவர்மேல் ஹிசார் போலீஸ் நிலையத்தில் பிரிவு 153, 153ஏ, 295, 505 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக அவர் தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் நேற்று ஹரியானாவில் அவரைப் போலிஸார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.