வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (17:16 IST)

டிஜிட்டல் பள்ளி....மத்திய அரசு உறுதி

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள் தேசிய அளவில் முன்னோக்கி இருப்பதாக மத்திய அரசின் டிஜிட்டல் வழிக் கல்வித்தரவுகள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவான நிலையில், தற்போது குரங்கு பி வைரஸால் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்க ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் இன்று தெரிவித்தார். தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்கல் கற்பித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள் தேசிய அளவில் முன்னோக்கி இருப்பதாக மத்திய அரசின் டிஜிட்டல் வழிக் கல்வித்தரவுகள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

இந்த டிஜிட்டல் வழி கல்வியில் அனைவருக்கும் சமமாக கல்வி அளிக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.