விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு: 'சர்கார்' பிரச்சனை குறித்து கமல்

Last Modified வியாழன், 8 நவம்பர் 2018 (19:02 IST)
விஜய் நடித்த 'சர்கார்' பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன்
கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ''முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும். என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே 'மெர்சல்' படத்தின் ரிலீசின்போது தமிழக பாஜகவினர் பிரச்சனை செய்தபோதும் கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :