“தென்னிந்திய சினிமாவைப் பார்த்து பயப்படுகிறார்கள்…” விக்ரம் வெற்றிவிழாவில் கமல்!
நடிகர் கமல்ஹாசன் கோயம்புத்தூரில் விக்ரம் படத்தின் 100 ஆவது நாள் வெற்றிவிழாவில் கலந்துகொண்டார்.
இந்த ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதற்காக கோவையில் நேற்றூ விக்ரம் படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
அப்போது பேசிய கமல்ஹாசன் “தென்னிந்திய சினிமாவின் பக்கம் இப்போது எல்லோரின் பார்வையும் திரும்பியுள்ளது. அதை நினைத்து வட இந்தியாவில் பயப்படுகிறார்கள். பல புதிய நடிகர்களை கவனித்து என்னிடம் இல்லாததை நான் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறேன். என்னை 63 ஆண்டுகளாக வாழவைத்தது சினிமாதான்.” எனப் பேசியுள்ளார்.