1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (14:14 IST)

100 ஆவது நாளை வெற்றிகரமாகக் கடந்த கமல்ஹாசனின் விக்ரம்!

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்த படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்தா. அனிருத் இசையமைத்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்த ஆண்டில் ஆர் ஆர் ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றிப் படமாக விக்ரம் கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று விக்ரம் திரைப்படம் 100 ஆவது நாளைக் கடந்துள்ளது. இது சம்மந்தமாக ஒரு சிறப்புப் பதிவை கமல்ஹாசன் வெளியிட்டு “தலைமுறைகள் கடந்தும் என்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.