வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (17:08 IST)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி - கமல் பதிலடி

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் அவரின் கருக்கலைப்பு கருத்தை பெண்கள் பார்த்து வருவதாகவும் கமல் கூறினார். 
இன்று கமல் குறித்து கருத்து தெரிவித்திருந்த ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்
கமல்ஹாசனின் கட்சி வளர்ந்தால் தமிழக மக்களுக்கு பெரும் ஆபத்து என நாகர்கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். கமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ள கமல்ஹாசன் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என்று கூறியுள்ளார்.