1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (18:04 IST)

அறம் எங்கே செல்லுபடியாகும்.. கமல்ஹாசனின் நேதாஜி பிறந்த நாள் பதிவு

kamal
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லும் என கடைசி வரை நம்பிக்கையோடு இருந்த விக்ரமன் தோல்வி அடைந்த நிலையில் அறம் வெல்லும் என்று தொடங்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் டுவிட்டை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியை நேற்று முடிந்த நிலையில் கமல்ஹாசன் அசீமுக்க்க் டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126 வது பிறந்தநாள் பதிவு ஒன்றை தனது டுவிட்டரில் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.
 
Edited by Siva