செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (14:35 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளனரா?… வெளியான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் நேற்றோடு முடிவு பெற்றது. இந்த சீசனின் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தொடரின் 6வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த சீசனில் ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஷிவின், அசல் கோளாறு என பலர் கலந்து கொண்டனர். இந்த சீசனின் வின்னராக யாரும் எதிர்பார்க்காத வகையில் அசீம் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ஐ மொத்தமாக 3 கோடி பேருக்கும் மேல் பார்த்துள்ளதாக விஜய் டிவியின் தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். இதை பிக்பாஸ் மேடையிலேயே கமல் முன்னணியில் அவர் அறிவித்தார்.