திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

கமல் நடிக்க வேண்டிய கேரக்டரில் வடிவேலு, வடிவேலு நடிக்க வேண்டிய கேரக்டரில் கமல்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்கப்பட்டு பின்னர் ஒருசில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் கதை திரைக்கதை பணிகள் முடிவடைந்தவுடன் அந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் ஷங்கர் மற்றும் சிம்பு தேவன் ஈடுபட்டிருந்தபோது நான்கு முக்கிய நடிகர்கள் அதில் பரிசீலனை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது 
ஆனால் ஒரு சில காரணங்களால் கமல் உள்பட அந்த நான்கு நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க முடியாமல் போய் விட்டது. எனவே கடைசியில் அந்த கேரக்டருக்கு வடிவேலு தேர்வு செய்யப்பட்டு அவர் நடித்த அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது 
 
இந்த நிலையில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு மீண்டும் நடித்து அந்தப் படம் கிட்டத்தட்ட பாதி அளவு முடிந்து விட்டது. ஆனால் திடீரென வடிவேலு செய்த பிரச்சனை காரணமாக அந்த படம் நிறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் வடிவேலுக்கு பதில் வேறு ஒரு நடிகரை அந்த கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனை தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் ’24ஆம் புலிகேசி’ படத்தில் புலிகேசி கேரக்டரில் கமல்ஹாசனை நடிக்க வைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு கமல்ஹாசன் ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
மொத்தத்தில் 23ஆம் புலிகேசி படத்தில் கமல்ஹாசன் நடிக்க வேண்டிய கேரக்டர்களில் வடிவேலு நடித்த நிலையில், தற்போது 24 ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க வேண்டிய கேரக்டர் கமலஹாசன் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்