வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (12:24 IST)

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 54
 
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் சற்று முன் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தியை அறிந்து பாலிவுட் திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவருக்கு தொடர்ந்து தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மறைந்த பாலிவுட் நடிகர் இர்பான்கான் தாயார் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் இயற்கை எழுதினார் என்பதும் அவரது இறுதிச் சடங்கிற்கு கூட இர்பான்கான் ஊரடங்கு உத்தரவு காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
லைஃப் ஆஃப் பை, ஜூராசிக் பார்க் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் ஏராளமான ஹிந்தி படங்களிலும் பாலிவுட் நடிகர் இர்பான் கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது