யார் நல்லவர்? யார் கெட்டர்? ஜூலிக்கு புரிய வைத்த கமல்
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறிய ஜூலி, கமல்ஹாசனிடம் உரையாடியபோது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே தன்னை புரிந்து தன்னிடம் அன்பு காட்டியதாக கூறினார். குறிப்பாக சினேகன், காயத்ரி, சக்தி ஆகியோர் தன்னிடம் மிகுந்த அன்பு வைத்திருப்பதாகவும், தானும் அவர்களிடம் உண்மையாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் உண்மையில் இவர்கள் மூவர்தான் ஜூலியை பற்றி அதிகமாக புறம் பேசியுள்ளனர் என்பதை ஜூலிக்கு ஒரு குறும்படத்தை போட்டு காட்டி யார் நல்லவர்? யார் கெட்டர்? என்பதை நிரூபித்தார். அப்பொழுது கூட சமாளித்து கொண்டு உண்மையை ஒப்புக்கொள்ளாமல் 'விடுங்க சார் எங்க குடும்பத்தை சேர்ந்தவங்கதானே பேசினாங்க, பரவாயில்லை' என்று பொய்யாக நடித்தார்.
இதை பார்த்த கமல், 'எனக்கு நடிப்பு பிடிக்கும், அதிலும் நன்றாக நடிப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று கூறினார். இருப்பினும் கமல் கலாய்க்கிறார் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத பரிதாபமான நிலையில் நேற்று ஜூலி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூலி, அரங்கத்திற்குள் நுழைந்தபோது ஒருவர் கூட கைதட்டி வரவேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.