1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (08:59 IST)

4 வருடங்களுக்கு பிறகு பெரிய திரையில் கமல்ஹாசன்… கொண்டாட்டத்த ஆரம்பிக்கிங்களா?

கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்கு 4 ஆண்டுகள் இடைவெளியில் வெளியாக உள்ளது விக்ரம்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதியை மார்ச் 14ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தங்களது ட்விட்டர் பக்கங்களில் ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 3 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.  இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் அட்டகாசமான க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றும் வெளியானது.

கமல்ஹாசன் அரசியலில் பிஸி ஆனதில் இருந்து சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கமலின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.