1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (07:15 IST)

இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை: லோகேஷ் கனகராஜ் டுவிட்

இதைவிட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை என்றும் நன்றி ஆண்டவரே என்றும் கமல்ஹாசனின் வாழ்த்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட் செய்துள்ளார்
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது: ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் @Dir_Lokesh -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
 
 கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்து லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது: இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே