வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (13:15 IST)

ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க நிபுணர்குழு பரிந்துரை: நாளை அறிவிப்பு வெளிவருமா?

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு வரும் 14ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து 14ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன் ஆலோசனை செய்தார்
 
சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை சற்று முன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் இதே நிலை தான் இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது