ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Vinothkumar
Last Updated : புதன், 10 ஜூலை 2024 (17:51 IST)

எந்த கட்டும் வேண்டாம்.. கலாநிதி மாறன் உறுதி? ராயன் படத்துக்கு A சான்றிதழ்!

Rayan
தனுஷின் 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார்.



இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. விரைவில் படத்தின் டிரைலர் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

இதனால் படத்தை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் எழலாம். உதாரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த படத்துக்கு வரத் தயங்குவார்கள். அதனால் சில கட்களை செய்துவிட்டு யு ஏ சான்றிதழ் வாங்கலாமா என சன் பிக்சர்ஸ் நிறுவன அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர். ஆனால் படத்தை பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் “எந்த கட்டும் செய்யவேண்டாம். இதை அப்படியே ரிலீஸ் செய்வோம்” என சொல்லிவிட்டாராம். அந்தளவுக்கு அவருக்கு படம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.