திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (10:07 IST)

திரைவாழக்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினி… பாராட்டு விழா நடத்த முன்னணி தயாரிப்பாளர் ஆயத்தம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 45 ஆண்டுகளாக ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறார். இடையில் அவர் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் அவருக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்து அடையாளம் பெற்று, வில்லனாகி, ஹீரோவாகி, சூப்பர் ஸ்டானார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு அவருக்கு சினிமாவில் பொன் விழா ஆண்டு. இதனையடுத்து அவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்த வேண்டும் என அவரின் நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் தாணு முடிவு செய்து அதை ரஜினிகாந்திடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுபோல கமல்ஹாசனின் 50 ஆவது ஆண்டுவிழாவை ஒட்டுமொத்த திரையுலகமும் சேர்ந்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.