1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (11:05 IST)

ஒரு வழியா டாடா படம் பாத்துட்டேன்… புகழ்ந்து தள்ளிய நடிகர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து இப்போது அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்துள்ளார். படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். படத்தில் சில பிரச்சனைகள் மற்றும் உணர்வு சுரண்டல் காட்சிகள் இருந்தாலும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் வாத்தி மற்றும் பகாசூரன் என இரண்டு புது ரிலீஸ் படங்கள் ரிலிஸானாலும், நகர்ப்புறங்களில் இன்னமும் கணிசமான கூட்டத்தோடு ஓடி வருகிறதாம் டாடா திரைப்படம்.

இந்நிலையில் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் நடிகர் கார்த்தி. படம் பற்றிய அவரது பதிவில் “ கடைசியாக டாடா படத்தைப் பார்த்துவிட்டேன். என்ன ஒரு சிறப்பான படம். சிறப்பான எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான படத்தை பார்ப்பது மகிழ்ச்சி.  கவினின் அழகான மற்றும் முழுமையான நடிப்பு. ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைபடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.