1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (10:06 IST)

முதல்வர்களில் முதன்மையானர்: முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!

mks kamal
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக மற்றும் தேசிய அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
ரஜினிகாந்த் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவில், ‘என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அவர் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியாகவும் வாழ்ந்து மக்கள் சேவை செய்வதற்கு அவருடைய 70 வது பிறந்தநாளில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கமல்ஹாசன் தனது டுவிட்டரில் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாவது, ‘முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு முக ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
 
Edited by Mahendran