எனக்கு பாதுகாப்பு இல்லை: பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த காஜல் அகர்வால்!

Papiksha| Last Updated: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (16:36 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 


 
அதைத்தொடந்து பாலிவுட் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்  அடித்த குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில்  திரைக்கு வரவிருக்கிறது. அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக புதுப்படமொன்றில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இப்படி சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலிடம் தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க பேசி இருக்கின்றனர். ஆனால், அந்த படத்தில் நடித்தால் தனக்கு பாதுகாப்பில்லை என்று கூறி நிராகரித்துள்ளார் காஜல். காரணம், அந்த படத்தின் கதைப்படி பெரும்பான்மையான படப்பிடிப்பு கர்நாடகாவின் காட்டுப்பகுதிகளில் நடக்கும் என கூறியுள்ளனர்.அது தனக்கு பாதுகாப்பாக இருக்காது என சொல்லி காஜல் அகர்வால் அந்த படத்தை நிராகரித்துவிட்டாராம்.  பின்னர் ராஷி கண்ணாவிடம் அனுகிய படக்குழு அவரும் இதே காரணத்தை சொல்லி நிராகாரத்ததால் வருத்தத்தில் புதுமுக நடிகையை தேடி வருகின்றனராம். 


இதில் மேலும் படிக்கவும் :