வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 6 மே 2020 (13:59 IST)

இந்த 3 நாளில் மொடா குடிக்காரி ஆகிவிட்டேன் - உண்மையை போதையில் உளறிய காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். தற்போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துவரும் காஜல் அகர்வால் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக 24 மணிநேரமும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிட்டு வ்ருகிறாரா. அந்தவகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் " கடந்த மூன்று நாட்களாக என் கைகள் பார்த்த அளவு ஆல்கஹாலை என்னுடைய லிவர் இந்த வாழ்நாளில் பார்த்தது இல்லை" என்று பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


கொரோனா ஊரடங்கில் மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளபோது பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டள்ளது குடிகார பிரியர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. அதில் காஜல் அகர்வாலும் அடிமையாகி இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகிவிட்டனர்.