வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:06 IST)

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம்… வெளியானது செம்ம அப்டேட்!

சீனுராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் ஒரு மாதத்துக்குள்ளாக முடிந்தது. இந்த படத்தில் முதல் முதலாக ஆக்‌ஷன் கதையை தேர்வு செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இப்போது இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாமனிதன் ரிலீஸ் வேலைகளில் இப்போது சீனு ராமசாமி இருப்பதால் அந்த ரிலீஸூக்கு பின் இதன் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு சீனு ராமசாமியின் முதல் படமான தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்கு இசையமைத்த என் ஆர் ரகுநந்தன் இசையமைக்கிறார்.