1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (16:55 IST)

இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் ஹனிமூன் புகைப்படங்கள்!

காஜல் அகர்வாலின் ஹனிமூன் புகைப்படங்கள்!
பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரும் அவருடைய மும்பை தொழிலதிபர் கணவருமான கௌதம் என்பவரும் சமீபத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே 
 
ஏற்கனவே தனது ஹனிமூன் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்த காஜல் அகர்வால் சற்றுமுன்னர் புதிய அசத்தலான புகைப் படங்களை பதிவு செய்துள்ளார். நீலநிற கடற்கரையின் பின்னணியில் நீல நிற உடை அணிந்து உள்ள காஜல் அகர்வால் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி வருகின்றன 
 
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேனிலவை முடித்து விட்டு மும்பை திரும்பியதும் அவர் சிரஞ்சீவியின் ஆச்சாரியா திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளில் படப்பிடிப்பு இன்னும் ஆறு நாட்கள் நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்