1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (15:09 IST)

குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். சமீபத்தில் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அதிகமாக இல்லாததால் கணவருடன் ஜாலியாக சுற்றிவருகிறார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் ஈடுபடும் வகையில் புதிய போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது வித்தியாசமாக தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.