1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 30 ஜூலை 2021 (12:17 IST)

மனித உருவத்தில் கடவுள்: சொத்துக்களை அடமானம் வைத்து உதவிய நடிகருக்கு பிறந்தநாள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோக  நகரில் 1973-ஆம் ஆண்டு ஜூலை 30ல் பிறந்த நடிகர் சோனு சூட் தற்போது கண்கண்ட கடுவுளாய் மக்கள் வணங்கும் தெய்வமாய் உருமாறியிருக்கிறார். 1996-ஆம் ஆண்டு சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இஷாந்த் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
 
பாலிவுட் திரைத்துரைத்துறையில் பல்வேறு படங்களில் குணசித்திர வேடம் மற்றும் வில்லன் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த அருந்ததி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்புகள் கிடைத்தது. மிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
திரையில் வில்லனாக பார்த்து மக்களால் வெறுக்கப்பட்ட சோனு சூட் இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவி நற்பெயரை சம்பாதித்து கடவுளாக தோன்றினார். 
 
ஒரு கட்டத்தில் உதவிகள் செய்ய தன்னிடம் போதிய பணம் இல்லாததால் சோனு சூட் மும்பை ஜூஹு பகுதியில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 6 வீடுகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் பெற்று ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்தார். இந்த மனித கடவுளுக்கு இன்று பிறந்தநாள் மனதார வாழ்த்தி அவரை ஆசீர்வதியுங்கள்!