செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2019 (10:17 IST)

கார்த்தியின் “கைதி” திரைப்படம் எப்படி இருக்கு?? டிவிட்டர் வாசிகளின் விமர்சனம்

தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் கைதி திரைப்படத்தை பற்றி ரசிகர்கள் டிவிட்டரில் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.

மாநகரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜனரஞ்சக சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவார்ந்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த கைதி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி இல்லை. நாயகன் மட்டுமே. இந்த திரைபடத்தின் இசை சாம் CS, ஒளிப்பதிவு சத்யன் சூரியன், படத்தொகுப்பு பிலோமின் ராஜ். கைதி திரைப்படத்தை டிரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
பிகில் திரைப்படத்தோடு போட்டி போட்டு வெளியான இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் தனது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்...