செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (18:34 IST)

”கைதி”யால் காணாமல் போன ”பிகில்”..ரசிகர்கள் வருத்தம்

பாக்ஸ் ஆஃபிஸில் வெளுத்து வாங்கிய திரைப்படங்களில் ”பிகில்” திரைப்படம் இடம்பெறவில்லை என ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு விஜய் நடிப்பில் ”பிகில்” திரைப்படமும், கார்த்தி நடிப்பில் “கைதி” திரைப்படமும் வெளிவந்த நிலையில் திரைப்பட ரசிகர்களுக்கு இது ஒரு ஸ்பெஷல் டிரீட் என்றே கூறலாம். கார்த்தியின் கைதி திரைப்படத்திற்கு “பிகில்” திரைப்படம் போல மாஸ் ஆடியன்ஸ் இல்லை என்றாலும், ஜனரஞ்சக சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்தது.

இந்நிலையில் ஹைதராபாத் சண்டே பாக்ஸ் ஆஃபீஸில் வெளுத்து கட்டிய படங்களில் ”பிகில்” இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கைதி திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் கவலையில் உள்ளனர்.