ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (16:07 IST)

விஜய் மாதிரி உங்களால் செய்ய முடியுமா? சவால் விட்ட ஏஜிஎஸ் - தெறிக்கவிட்ட புல்லிங்கோ!

தமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  

 
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் கடைசிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது ஏ.ஜி.எஸ்  நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் " பிகில் ட்ரைலரில் விஜய் Rainbow Flick செய்தது போன்று  செய்து  #BigilRainbowFlickChallenge என்ற ஹேஸ்டேக்கில் பதிவிட கூறியுள்ளனர். இதை கண்ட விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக இந்த சேலஞ்சில் ஈடுபட்டு அவரவர் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றர்.