1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (07:24 IST)

காடுவெட்டி படத்துக்கு 31 இடங்களில் கட்… சென்சார் போட்ட தடா!

ஆர் கே சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடுவெட்டி. இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் வன்னியர் சங்க தலைவர் குரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகம் பேசும்போது ”இந்த படத்துக்கு சென்சாரில் 31 கட்கள் கொடுத்தார்கள். காடுவெட்டி என்ற தலைப்பை வைக்கக் கூடாது என சொன்னார்கள்.

நான் என்னுடைய விளக்கத்தைக் கொடுத்தேன். அந்த காலத்தில் மன்னர்கள் வீரர்களின் பயிற்சிக்காக காடுகளை வெட்டி பயிற்சிக் களமாக பயன்படுத்துவார்கள். அதன் பின்னர் அதனை மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதை ஊராக மாற்றுவார்கள். அப்படிப்பட்ட ஊர்களுக்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள். அப்படி தமிழ்நாட்டில் 11 இடங்கள் உள்ளன எனக் கூறினேன். இந்த படம் வடமாவட்ட மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசும்” எனக் கூறியுள்ளார்.