வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (20:15 IST)

இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கவில்லை- யுவன்சங்கர் ராஜா

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ். இவர்  தம்பிக்கோட்டிய, சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தார். 
 
அத்துடன், விநியோகஸ்தராக   நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, தங்க மீன்கள்  உள்ளிட்ட படங்களிலும்; பாலாவின் தாரைதப்பட்டை, மருது, ஹர ஹர மஹாதேவகி, இப்படை வெல்லும், காளி, பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை, விருமன், பட்டத்து அரசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் நடித்து இயக்கவுள்ள அடுத்த படம் தென்மாவட்டம் இப்படத்தின் முதல்லுக் போஸ்டர்  வெளியானது.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவலான நிலையில், இப்படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளதாவது: ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்கவுள்ள தென்மாவட்டம் என்ற படத்திற்கு நன இசையமைக்கவில்லை. இப்படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
தற்போது யுவன் விஜயின் The GOAT படத்திற்கு தீவிரமாக இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.