செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (23:28 IST)

’காதல்’ பட நடிகர் காதலியுடன் திருமணம்

பரத் – சந்தியா  நடிப்பில் வெளியான காதல் படத்தில் நடித்த அருண்குமார் தனது காதலியை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளியான படம் காதல். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இப்படத்தில் பரத்தின் உதவியாளர் வேடத்தில்  குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அருண்குமார். இதன்பின்னர் இவர் விஜய்யின் சிவகாசி, உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், இவர் காதலித்து வந்த பெண்ணை இன்ற் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு சினிமாத்துறையினரும் , ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருன்றனர்.