1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:55 IST)

மலையாளத்தில் அறிமுகமாகும் காலா நடிகை

தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துவரும் சாக்‌ஷி அகர்வால், முதன்முறையாக மலையாளத்தில் கமிட்டாகியுள்ளார்.

 
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாக்‌ஷி அகர்வால், மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர். அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
கன்னடப் படங்களிலும் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால், முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார். புதியவரான ப்ரமோத் மோகன் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘ஓராயிரம் கினாக்கள்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.