1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (19:57 IST)

காலாவுக்கு செக் வைத்த கர்நாடகா

கர்நாடகாவில் ரஜினி நடித்துள்ள காலா படத்தை வெளியிட தடை விதித்துள்ளது கர்நாடகா வர்த்தக சபை.
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருன் ஜுன் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் தராததால் ரஜினி கர்நாடகாவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதனால் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் ரஜினி படத்தை திரையிட மாட்டோம் என தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் ரஜினி நடித்த காலா படத்தை மாநில நலன் கருதி கர்நாடகாவில் வெளியிட தடை விதித்துள்ளதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.