1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (12:15 IST)

க பெ ரணசிங்கம் பட இயக்குனர் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

கொரோனா பொதுமுடக்க நாட்களில் நேரடியாக ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி இந்தியா கொண்டுவரும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஆங்காங்கே அரசியல் கருத்துகளை தெளித்திருந்தார் இயக்குனர் விருமாண்டி.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் இயக்குனர் விருமாண்டி. அந்த கதையில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் ஆனார். ஆனாலும் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இதற்குக் காரணம் சசிகுமாருக்கு தற்போது மார்க்கெட் இல்லை என்பதால் தயாரிப்பு நிறுவனம் தயங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் விருமாண்டி தற்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் ஒரு வரலாற்றுக் காலகட்ட கதை என சொல்லப்படுகிறது. மிகப் பிரம்மாண்டமாக இந்த வெப் சீரிஸை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  விரைவில் என சொல்லப்படுகிறது.