செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 மே 2023 (14:24 IST)

விடா முயற்சியில் நடிக்க வாய்ப்புக் கேட்ட பிரபலம்… கொடுப்பாரா மகிழ் திருமேனி?

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மே 1 ஆம் தேதி  நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் டைட்டில் ‘விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டு படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியாகியுள்ள போஸ்டர் இணையத்தில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து அவர்களை திக்குமுக்காட செய்துள்ளது. 

இந்நிலையில் விடாமுயற்சி பற்றி பேசியுள்ள பிரபல சினிமா பைனான்சியரும், நடிகருமான கே ராஜன் மகிழ்திருமேனியிடம் தமிழில் தலைப்பு வைத்தற்காக பாராட்டியதாகவும், தனக்கு பொருத்தமான வேடம் இருந்தால் படத்தில் நடிக்க என்னை அழைக்கவும் என சொல்லியுள்ளதாக கூறியுள்ளார். படம் ஆரம்பிக்கும் முன்னரே தூண்டில் போட்டு வைத்த கே ராஜனுக்கு மகிழ் திருமேனி வாய்ப்புக் கொடுப்பாரா?