1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (07:27 IST)

V செண்ட்டிமெண்ட்டில் இதுவரை வந்த அஜித் படங்கள்… எல்லாமே ஹிட்டா?

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் டைட்டில் ‘விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டு படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில ரசிகர்களுக்கு இந்த விடாமுயற்சி டைட்டில் பிடிக்கவில்லை. வி செண்ட்டிமெண்ட்டுக்காக இப்படி எல்லாமா டைட்டில் வைப்பது என்று சலித்துக் கொள்கின்றன. ஆரம்ப காலத்தில் அஜித்துக்கு V எழுத்தில் தொடங்கும் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதைக் காரணம் காட்டி, சமீபகாலம் வரை V எழுத்தில் தொடங்குவது பொல டைட்டிலை வைத்து வருகின்றனர். அதில் பல டைட்டில்கள் படத்தின் கதைக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாதவையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அஜித் இதுவரை வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம், வலிமை மற்றும் விடா முயற்சி என 10 படங்கள் நடித்துள்ளார். இதில் விவேகம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்தான். அதனால்தான் அஜித் அந்த செண்ட்டிமெண்ட்டை தொடர்கிறார் போல இருக்கு!.