நாங்கள் பவுடர் மற்றும் ரத்தத்தை நம்புகிறவர்கள் இல்லை… அயலான் குறித்து தயாரிப்பாளர் கருத்து!
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் அயலா அயலா என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் “அயலான் திரைப்படம் இப்போதே பிளாக்பஸ்டர் ஆகிவிட்டது. நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள். பவுடர் (போதை பொருள்கள்) மற்றும் ரத்த மேக்கப்பை நம்புகிறவர்கள் இல்லை. ” எனப் பேசியுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் போதை பொருள் சம்மந்தப்பட்ட படங்கள் அதிகமாக ரிலீஸாகும் நிலையில் அதைக் கிண்டல் செய்வது போல ராஜேஷின் இந்த பேச்சு அமைந்துள்ளது.