ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (08:48 IST)

குழந்தைகள் கொண்டாடும் பாட்டு ஆயிடும் போல… ரசிகர்களைக் கவர்ந்ததா அயலான் செக்ண்ட் சிங்கிள்!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘அயலா அயலா” என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

குழந்தைகளைக் கவரும் விதமாக பாடலின் வரிகள் அமைந்துள்ளன. ஏலியனை வரவேற்கும் விதமாக சிவகார்த்திகேயன் குழுவினர் பாடும் விதமாக வரிகள் அமைந்துள்ளனர். பாடலின் மெட்டு பெரிதாக ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பை தரும் விதமாக அமையவில்லை. இதனால் இந்த பாடல் குழந்தைகள் கொண்டாடும் பாடல் ஆகிவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.