வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (21:02 IST)

நடிகர் சூர்யாவுக்கு பரிசளித்த ஜோதிகா

நடிகர் சூர்யாவுக்கு ஜோதிகா, திருமண நாளை முன்னிட்டு ஒரு ஓவியத்தைப் பரிசளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது ஜெய்பீம், வெற்றிமாறன் இயக்கத்தில்  வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்தி மற்றும் ஷங்கர் மகள் அதிதி நடிப்பில் உருவாகவுள்ள முத்தையா இயக்கவுள்ள துருவன் என்ற படத்தை சூர்யா தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா – ஜோதியா ஆகியோரின் 15  ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவர்து ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.  

திருமணம் நாளை முன்னிட்டு இன்று ஜோதியாக சூர்யாவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஓவியத்தைப் பரிசளித்துள்ளார். அதில், என் சிங்கத்திற்குப் பரிசு எனத் தெரிவித்துள்ளார்.