1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:43 IST)

நடிக்க வாய்ப்பு தேடுபவர்களுக்கு வலை..! – நடிகர் சூர்யா நிறுவனம் பெயரில் மோசடி!

நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் பெயரில் மர்ம கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பல்வேறு பட்ஜெட் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2டி நிறுவனம் போலவே பெயர், லோகா போன்றவற்றை வைத்து சமூக வலைதளங்களில் மர்ம கும்பல் ஒன்று பலரிடம் நடிக்க வாய்ப்பு தருவதாக பணம் பறித்ததாக தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நபரிடமும் கூகிள் பே மூலம் 3,500 ரூபாய் வரை பெற்றிருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களிலும் 2டி நிறுவனம் இதுகுறித்த எச்சரிக்கை செய்தியை பகிர்ந்துள்ளது.